வெளிநாட்டுப் பெண்ணை பாலியல் தொல்லை செய்த திருக்கோவில் நபர்


திருக்கோவில் பகுதியில் வெளிநாட்டு சுற்றுலாப் பெண் ஒருவரிடம் பாலியல் தொல்லை செய்த சம்பவத்தில் தேடப்பட்ட சந்தேக நபரை பொலிஸார் பெரியநீலாவணை பொலிஸ் பிரிவில் உள்ள மருதமுனை பிரதேசத்தில் வைத்து கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் 25 வயது திருமணமானவர் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

இலங்கைக்கு சுற்றுலா வந்த நியூசிலாந்து பெண் ஒருவர், அக்டோபர் 25 ஆம் திகதி சுற்றுலா சென்றிருந்தபோது ஒரு இளைஞர் தகாத நடத்தையில் ஈடுபட்டதாகக் கூறி இலங்கை சுற்றுலா பொலிஸிடம் முறைப்பாடு அளித்திருந்தார். இதனடிப்படையில் களுவாஞ்சிகுடியில் வசித்து வந்த குறித்த நபர் பெரியநீலாவணை பொலிஸ்பிரிவில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்

இந்த சம்பவத்தின் வீடியோவையும் அவர் சமூக ஊடகங்களில் வெளியிட்டிருந்தார். இது தொடர்பாக சுற்றுலா பிரிவு பொலிஸார் நடத்திய விசாரணையில், சம்பந்தப்பட்ட வெளிநாட்டுப் பெண் அன்று அறுகம்பை யிலிருந்து பாசிக்குடாவுக்குச் சென்றபோது திருக்கோவில் பகுதியில் குறித்த சம்பவம் நடந்ததாக தெரியவந்துள்ளது.

கைது செய்யப்படும் போது சந்தேக நபர் தலையை மொட்டையடித்து தனது தோற்றத்தை மாற்றிக் கொண்டிருந்ததாகப் பொலிஸார் தெரிவித்தனர்

Visited 3 times, 1 visit(s) today

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *