யாழில் ஆலய பூசகரை கட்டிவைத்து கொள்ளை


யாழ். கைதடியில் ஆலயப் பூசகரைக் கட்டி வைத்து கூரிய ஆயுதங்களால் தாக்கி அவர் அணிந்திருந்த தங்கச் சங்கிலியையும், பணத்தையும் கொள்ளையிட்டுச் சென்ற சம்பவம் யாழ். கைதடியில் இடம்பெற்றுள்ளது.

கைதடி ஏ – 9 வீதியில் அமைந்துள்ள கௌரி அம்மன் ஆலயத்திலேயே இந்தக் கொள்ளைச் சம்பவம் நேற்று புதன்கிழமை இடம்பெற்றுள்ளது.

பூசகரின் அலறல் சத்தம் கேட்டு அயலவர்கள் அங்கு விரைந்தபோது இரண்டு கொள்ளையர்கள் பூசகர் அணிந்திருந்த 2 பவுண் தங்கச் சங்கிலியையும், 45 ஆயிரம் ரூபா பணத்தையும் கொள்ளையிட்டுத் தப்பிச் சென்றுள்ளனர்.

கொள்ளையர்களுக்கு உதவிய பெண் ஒருவர் இதன்போது பிடிக்கப்பட்டு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

கைதான சந்தேகநபர் இன்று வியாழக்கிழமை சாவகச்சேரி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார் என்று சாவகச்சேரி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, தப்பிச் சென்ற இரண்டு கொள்ளையர்களையும் கைது செய்யும் நடவடிக்கையிலும் பொலிஸார் ஈடுபட்டுள்ளனர்.

Visited 8 times, 1 visit(s) today

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *