யாழ். தையிட்டியில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ள திஸ்ஸ விகாரைக்கு எதிராக நேற்றுப் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.
இதன்போது அங்கிருந்த ஆர்ப்பாட்டக்காரர்களின் கூடாரங்களைப் பொலிஸார் அகற்றியுள்ளனர்.
தையிட்டியில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ள திஸ்ஸ விகாரையை அகற்றுமாறு வலியுறுத்தியும், திஸ்ஸ விகாரை அமைக்கப்பட்டுள்ள காணி, அதனைச் சூழவுள்ள காணிகளைக் காணி உரிமையாளர்களிடம் மீளவும் வழங்குமாறு கோரியும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி பாதிக்கப்பட்ட பொதுமக்களுடன் இணைந்து மாதாமாதம் முன்னெடுக்கும் தொடர் ஆர்ப்பாட்டம் பௌர்ணமி தினமான நேற்றும் தையிட்டி திஸ்ஸ விகாரைக்கு அருகில் நடத்தப்பட்டபோதே ஆர்ப்பாட்டக்காரர்களின் கூடாரங்களைப் பொலிஸார் அகற்றினர்.
இதையடுத்துப் பொலிஸாரின் செயலுக்கு எதிராகப் ஆர்ப்பாட்டக்காரர்கள் கோஷமிட்டனர். இதனால் அங்கு பதற்றம் நிலவியது.
எனினும், நேற்றுக் காலை 6 மணிக்கு ஆரம்பிக்கப்பட்ட போராட்டம் மாலை 6 மணி வரை மக்களால் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டது.
