இட்லி உண்ணும் போட்டியில் உயிரை விட்ட நபர்


கேரளாவில் இட்லி உண்ணும் போட்டியில் முதியவர் உயிரிழந்துள்ளார்.

மலையாளிகளின் முக்கிய திருவிழாவான ஓணம் கேரளாவில் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது.

ஓணத்தை முன்னிட்டு கேரளா மாநிலம் பாலக்காடு மாவட்டத்தில் இட்லி உண்ணும் போட்டி நடைபெற்றது. அதிக இட்லி உண்பவர்க்கு ரூ.5000 பரிசு தொகை என அறிவிக்கப்பட்டது.

இந்த போட்டியில் சுரேஷ் என்ற 50 வயது முதியவர் பங்கேற்றுள்ளார். வெற்றி பெற வேண்டுமென அவசரமாக 3 இட்லியை ஒன்றாக முழுங்க முயற்சித்துள்ளார். ஆனால் இட்லி தொண்டையில் சிக்கி மூச்சு விட முடியாமல் துடிதுடித்துள்ளார்.

உடனடியாக அவரை அங்கிருந்தவர்கள் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். ஆனால் அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்தார்.

இது இயற்க்கைக்கு மாறான மரணம் என காவல்துறை வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறது. ஓணம் பண்டிகை கொண்டாட்டத்தில் ஒருவர் உயிரிழந்த சம்பவம் அங்கிருந்தவர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

Visited 30 times, 1 visit(s) today

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *