ரி-20 உலகக்கிண்ணக் கிரிக்கெட் தொடர் இலங்கையில் இடம்பெறவுள்ள நிலையில், தொடருக்கான கிண்ணம் யாழ்ப்பாணத்துக்கு எடுத்து வரப்பட்டது.
யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்திற்கு அருகில் , நல்லூர் கந்தன் ஆலயத்திற்கு அருகிலும், துரையப்பா விளையாட்டு அரங்கிலும், யாழ்ப்பாணம் கோட்டையிலும், யாழ்ப்பாணம் நூலகத்திலும் மக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டது.
நல்லுார் ஆலயத்தின் வெளிவீதிப் பகுதிக்கு உலகக் கிண்ணம் கொண்டு செல்லப்பட்ட போது அங்கிருந்த நல்லுார் தொண்டர்கள் அங்கு சென்ற உலககிண்ண அணியை கலைத்து துரத்தி ரணகளப்படுத்தியுள்ளனர்.
யாழ்ப்பாணம் நல்லூர் ஆலய சூழலிற்கு எடுத்து வரப்பட்ட வெற்றிக்கிண்ணம் ஆலய நிர்வாக அறிவிப்பின் பிரகாரம் நகர்த்தப்பட்டுள்ளது.
நல்லூர் ஆலயத்தை குறிப்பாக முன் பக்கத்தை சுற்றியுள்ள வேலிக்குள் வாகனங்கள் கொண்டு செல்லவோ , செருப்புடன் செல்லவோ அனுமதியில்லை.
விளம்பர நோக்கங்களுடன் , பாடல்கள் , திருமண சூட்டிங் என சூட்டிங்குகளுக்கு அனுமதியில்லை.
ஆலயத்திற்கு முன்பாக நின்று படங்கள் எடுத்து கொள்ள முடியும். அதனை ஒரு சூட்டிங்கா நடத்த முடியாது.
நேற்றையதினம் தைப்பூசம் , முருகன் வெளிவீதியுலா வருவதற்கு தயார். உள்ளே வசந்தமண்டப பூஜை முடிந்து , முருகனை தூக்க ரெடி. அந்த நேரம் கப்புடன் , ஆலய வேலிக்குள் சென்று கப்பை வைத்து சூட்டிங் செய்ய தயார்.
உள்ளே படம் எடுக்க தொடங்க சிவப்பு சால்வைக்காரர்கள் பாய்ந்து வருவார்கள் என நல்லூரை பற்றி தெரிந்த கமரா டீம் முழுக்க வேலிக்கு வெளியே , எதிர்பார்த்தது போல நடந்தது.
பிறகு கப்பை தூக்கி கொண்டு வேலிக்கு வெளியே வந்து வைத்து ஆறுதலாக படம் எடுத்தாங்க ,
யாழ்ப்பாணத்திற்கு கப்பை எடுத்து வந்த ஏற்பாட்டு குழு ஆலய நடைமுறைகள் குறித்து தெளிவு படுத்தி , அந்த குழப்பத்தை தவிர்த்து இருக்கலாம் என சம்பவத்தை நேரில் பார்த்த ஒருவர் பதிவிட்டுள்ளார்.
