இலங்கையின் சுற்றுலா துறை கடந்த ஆண்டை விட நிகழாண்டு ஜனவரியில் 122 சதவீதம் வளர்ச்சி பெற்றுள்ளதாக நிதித்துறை இணையமைச்சர் தெரிவித்துள்ளார் .
இலங்கை சுற்றுலாத்துறை கடந்த ஆண்டு ஒப்பிடுகையில் நிகழாண்டு ஜனவரியில் சுமார் 122 சதவீதம் வளர்ச்சி பெற்று உள்ளது என நிதி துறை இணை அமைச்சர் ரஞ்சித் சியம்பலபிட்டிய தெரிவித்துள்ளார்.
இது குறித்து மேலும் கூறியதாவது :
இலங்கையின் சுற்றுலாத்துறை 342 மில்லியன் டாலர் வருவாயை தற்போது ஈட்டியுள்ளது . இதை அடிப்படையாக வைத்து பார்த்தால் சுற்றுலாத்துறை இந்த வருடம் சுமார் 122 சதவீதம் வளர்ச்சி அடைந்திருப்பது தெளிவாகத் தெரிகிறது . மேலும் பொருளாதார நெருக்கடி இருந்த நிலையில் இலங்கை ரூபாயின் மதிப்பு சரிந்திருந்த காலத்தில் நிகழாண்டு ஜனவரியில் ரூபாய் மதிப்பு 14.6 சதவீதம் அதிகரித்துள்ளது . இலங்கையில் ஏற்பட்ட கடும் பொருளாதார நெருக்கடி காரணமாக 2022 ஆம் ஆண்டின் இரண்டாவது கேலண்டரில் திவால் நிலையை அறிவித்தது அரசு அதன் பின்னர் சர்வதேச நிதியின் (ஐ.எம்.எஃப்) கடன்உதவியுடன் பொருளாதார நெருக்கடியில் இருந்து இலங்கை மீண்டும் படிப்படியாக மீண்டு வருகிறது என்று அமைச்சர் ரஞ்சித் சியம்பலபிட்டிய தெரிவித்தார் .
