பருத்தித்துறையில் வீதிக்கு இறங்கிய வியாபாரிகள்


யாழ்ப்பாணம் – வடமராட்சி, பருத்தித்துறை மரக்கறி சந்தையை முன்னர் இயங்கிய இடத்திற்கு மாற்றுமாறுகோரி பருதித்துறை வர்த்தக சமூகத்தினர் இணைந்து கவனயீர்ப்பு பேரணி ஒன்றை ஆரம்பித்துள்ளனர்.

பருத்தித்துறை நகரிலிருந்து அனைத்து வர்த்தக நிலையங்களும் மூடப்பட்டு குறித்த பேரணி இடம்பெறுகிறது.

இதில் 200 வரையான வர்த்தகர்கள் இணைந்திருக்கின்றார்கள். பருத்தித்துறை நவீன சந்தை பகுதியில் இருந்து ஆரம்பித்த பேரணி நகரசபை வரை சென்றடையவுள்ளது.

 

Visited 2 times, 1 visit(s) today

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *