கொடகவெல, தொம்பகொல, எல்ல பிரதேசத்தில் உள்ள பாழடைந்த பாதுகாப்பற்ற பாலத்தில் இருந்து தவறி விழுந்து நீரில் மூழ்கி உயிரிழந்த இளைஞனின் சடலம் நேற்று (13) மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்தவர் , மல்வத்தை கொடகவெல பிரதேசத்தை சேர்ந்த திருமணமான 27 வயதுடைய நதிக நுவன் திலகரத்ன என தெரிவிக்கப்படுகின்றது.

உயிரிழந்தவர் கொடகவெலயில் உள்ள நிதி நிறுவனமொன்றில் பணிபுரியும் ஒருவர் என பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த நபர் நேற்று முன் தினம்(12) இரவு சந்தைக்கு சென்றுவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்த போது இவ் விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
மேலும் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Visited 20 times, 1 visit(s) today
