மாத்தறை வெவஹமந்துவ பிரதேசத்தில் உள்ள குடியிருப்பு ஒன்றில் இருந்து T-56 ரக துப்பாக்கி உட்பட 2 துப்பாக்கிகள் மற்றும் 60 க்கும் மேற்பட்ட தோட்டாக்களுடன் இரண்டு சந்தேக நபர்களை பொலிஸ் அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவின் (PNB) மாத்தறை உப பிரிவு அதிகாரிக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து இன்று (17) மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதன்படி, டி-56 துப்பாக்கி மற்றும் அதற்கு பயன்படுத்தப்பட்ட 60 தோட்டாக்கள், இரண்டு டி-56 மகசீன்கள், ‘கல்கடாஸ்’ நாட்டுத் துப்பாக்கி மற்றும் அதற்கு பயன்படுத்தப்பட்ட இரண்டு தோட்டாக்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் 34 மற்றும் 38 வயதுடைய மாத்தறை வெவஹமந்துவ பிரதேசத்தில் வசிப்பவர்கள் மற்றும் பல்வேறு குற்றச் செயல்களுடன் தொடர்புடையவர்கள் என சந்தேகிக்கப்படுகிறது.
ஜனவரி 12ஆம் திகதி மாத்தறை தெவுந்தர பிரதேசத்தில் வர்த்தகர் ஒருவரை சுட்டுக் கொல்ல முயற்சித்த சம்பவத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த சந்தேகநபர்களில் ஒருவர் கைது செய்யப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
