நாட்டில் பல கொலைகள் மற்றும் சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகக் கூறப்படும் இரு பாதாள உலகக் குற்றவாளிகள் துபாயில் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டு இலங்கைக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.
சந்தேக நபர்களான 26 வயதான் கே.திமுத்து சதுரங்க, 48 வயதான தினேஷ் ஷர்மன் ஆகியோர் இன்று (12) அதிகாலை மீண்டும் இலங்கைக்கு அழைத்துச் செல்லப்பட்டதாக பொது பாதுகாப்பு அமைச்சர் திரன் அலஸ் தெரிவித்துள்ளார்.
குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் (CID) 4 சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகள் குழுவினால் சந்தேகநபர்கள் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டனர்.
சந்தேக நபர்கள் இன்று அதிகாலை 5.10 மணியளவில் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானத்தில் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு வந்துள்ளனர்.
Visited 14 times, 1 visit(s) today
