நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள வேட்டையன் திரைப்படம் கடந்த அக்டோபர் 10 ஆம் தேதி திரையரங்கில் வெளியிடப்பட்டது. ஜெய் பீம் வெற்றி திரைப்படத்தை கொடுத்த ஞானவேல் இப்படத்தை இயக்கியுள்ளார்.
மேலும் பகத் பாசில், மஞ்சு வாரியர், அமிதாப் பச்சன் போன்ற முக்கிய பிரபல நட்சத்திரங்கள் இப்படத்தில் நடித்துள்ளனர். இப்படத்திற்கான தயாரிப்பு ரூ. 200 கோடி பட்ஜெட் என்ற விகிதத்தில் ஒதுக்கப்பட்டது. ஆனால் தமிழ்நாட்டில் மட்டும் ரூ. 86 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. உலகம் முழுவதும் வெற்றி நடை போடும் வேட்டையன் ரசிகர்கள் மத்தியில் நீங்கா இடத்தை பெற்றுள்ளது.
Visited 47 times, 1 visit(s) today
