இந்தியாவிலிருந்து யாழ்ப்பாணம் – பலாலி சர்வதேச விமான நிலையம் ஊடாக பலாலிக்கு வந்த பெண்ணொருவர் தனது வயிற்றில் தங்கத்தை வைத்திருந்ததைப் பலாலி விமான நிலைய அதிகாரிகள் சோதனையில் கண்டறிந்துள்ளனர்.
இந்த சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளது. கொழும்பை சேர்ந்த பெண்ணொருவரே இவ்வாறு தங்கம் கடத்தியுள்ளார். சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
குறித்த பெண் இந்தியாவில் இருந்து வயிற்றில் தங்கம் கொண்டு வந்துள்ளார்.
இந்தநிலையில், யாழ். பலாலி விமான நிலைய அதிகாரிகளின் சோதனையில் ஈடுபட்டபோது இது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இதன்பின், கடத்தலில் ஈடுபட்ட பெண் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.
இதையடுத்து, அங்கு குறித்த பெண்ணிற்கு சிகிச்சையளிக்கப்பட்டு பின் தங்கம் மீட்டு எடுக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
Visited 4 times, 1 visit(s) today
